வியாசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேத வியாசர் மகா பாரதக் கதையை எழுதியவர். மகாபாரதக் கதையிலும் வருபவர். சத்தியவதியினதும் பராசரரதும் மகன் ஆவார். வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:
• வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
• உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் ஒரே நூலில் 555 சூத்திரங்களாக இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.
• பாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளுவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.
• அவர் இயற்றிய 17 புராணங்கள் இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும் இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.
• பதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றி பக்தி யென்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்கு பாரத தேசத்தில் இவ்வளவு மஹிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.
• பகவத்கீதையை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று வியக்கும்படி செய்திருக்கிறார்.
| வியாசரின் மகாபாரதம் | |
|---|---|
| கதை மாந்தர் | |
| குரு வம்சம் | மற்றவர்கள் |
| சாந்தனு | கங்கை | பீஷ்மர் | சத்யவதி | சித்ராங்கதன் | விசித்திரவீரியன் | அம்பிகா | அம்பாலிகா | விதுரன் | திருதராஷ்டிரன் | காந்தாரி | சகுனி | சுபத்ரா | பாண்டு | குந்தி | மாத்ரி | தருமர் | பீமன் | அர்ஜூனன் | நகுலன் | சகாதேவன் | துரியோதனன் | துச்சாதனன் | யுயுத்சு | துசாலை | திரெளபதி | இடும்பி | கடோற்கஜன் | அகிலாவதி | உத்தரை | உலுப்பி | சித்திராங்கதா | அம்பா | Barbarika | பாப்ருவாஹனன் |Iravan | அபிமன்யு | பரீட்சித்து | விராடன் | கிருபர் | துரோணர் | அஷ்வத்தாமா | ஏகலைவன் | கிரிதவர்மன் | ஜராசந்தன் | சாத்யகி | மயாசுரன் | துர்வாசர் | சஞ்சயன் | ஜனமேஜயன் | வியாசர் | கர்ணன் | ஜயத்திரதன் | கிருஷ்ணர் | பலராமர் | துருபதன் | இடும்பன் | திருஷ்டத்யும்னன் | சால்யன் | அதிரதன் | சிகண்டி |
| மற்றயவை | |
| பாண்டவர் | கௌரவர் | அஸ்தினாபுரம் | இந்திரப்பிரஸ்தம் | குருச்சேத்திரப் போர் | பகவத் கீதை | |

